புதுக்கோட்டை

பாராட்டப்படும் கந்தர்வகோட்டை வருவாய்த் துறையினர்

DIN

கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் தொடர்ந்து ஈடுப்பட்டு வரும் கந்தர்வகோட்டை வருவாய்துறையினரை அப்பகுதி மக்கள் பாராட்டியுள்ளனர். 

கரோனா வைரஸ் பரவலில் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் இருந்த நேரத்தில் அவர்களுக்கு புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டாட்சியர் பொ. சதீஸ் தலைமையிலான வருவாய்த்துறை அலுவலர்கள் வறுமையில் உள்ளோர், கூலி தொழிலாளர்கள், முதியோர் உதவிதொகை பெறுவோர் என பாதிக்கப்பட்டவர்களை தேடி அவர்கள் இருப்பிடம் சென்று அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்திவாசியப் பொருள்களை வழங்கி வந்தனர். 

தொடர்ந்து கந்தர்வகோட்டை கிராம நிர்வாக அலுவலர் அரங்க. வீரபாண்டியன் கரோனா வைரஸ் பரவல் காலகட்டம் முதல் இன்றுவரை பேருந்து நிலையம் , அரசு மருத்துவமனை முன்பாக தினந்தோறும் பொதுமக்களுக்கு கபசுர கசாயம் வழங்கி வருவதும் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வ. சரவணக்குமார், கோட்டாட்சியர் எஸ். தண்டாயுதபாணி உள்ளிட்ட அதிகாரிகள் மூலமாக கரோனா வைரஸ் விழிப்புணர்வாக பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்குதல் என கரோனா வைரஸ் பரவல் தடுக்கும் பணியில் ஈடுப்பட்டு வரும் வருவாய்துறையினரின் இந்த பணியினை கந்தர்வகோட்டை சுற்றுவட்டார பொதுமக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா ராஜிநாமா!

லக்னௌ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

ரோஸ் நிறக் காரிகை!

பாஜகவின் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்: காங்கிரஸ் அடுக்கடுக்கான புகார்!

வெளியானது 'தலைமைச் செயலகம்' டிரைலர்!

SCROLL FOR NEXT