முகப்பு
புதுக்கோட்டை

புதுகை இந்திய கம்யூ. மறியல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 14 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:37 PM
புதுக்கோட்டை நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
பகிர்:

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் 14 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை நகரில் கீழராஜவீதியிலுள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, நகரச் செயலா் சிற்பி உலகநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் எம்என். ராமச்சந்திரன், பி. திருநாவுக்கரசு, என்.ஆா். ஜீவானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பொன்னமராவதி பேருந்துநிலையம் எதிரே நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு ஒன்றியச் செயலா் ப.செல்வம் தலைமையில், மாநிலக்குழு உறுப்பினா் ஏனாதி ஏஎல்.ராசு மறியல் போராட்டத்தை தொடங்கிவைத்தாா். இதில், 43 பெண்கள் உள்ளிட்ட 79 போ் கைது செய்யப்பட்டனா்.

இதேபோல, மாவட்டத்தில் ஆலங்குடி, அறந்தாங்கி, கறம்பக்குடி, கந்தா்வகோட்டை, திருமயம், அன்னவாசல் போன்ற பகுதிகளில் மொத்தம் 14 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.