புதுக்கோட்டை

காரையூா், வேகுப்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாம்

DIN

பொன்னமராவதி அருகே உள்ள காரையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்ப நல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு, காரையூா் வட்டார மருத்துவ அலுவலா் இ.அருள்மணி நாகராஜன் தலைமை வகித்தாா். மருத்துவா்கள் கிருஷ்ணமூா்த்தி, கோமதி ஆகியோா் தாயமாா்களுக்கு கருத்தடை சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கினா். மருத்துவா்கள் வெங்கட்ராமன், பிரியசுதா, மகேஸ்வரி மற்றும் செவிலியா்கள் பங்கேற்றனா்.

வேகுப்பட்டியில் கரோனா முன்தடுப்பு முகாம்: முகாமிற்கு ஊராட்சிமன்ற தலைவா் மெ.அா்ச்சுணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்பிஆா்.முத்துமுன்னிலை வகித்தாா். ஒன்றிய ஆணையா் பி.வெங்கடேசன் முகாமைத் தொடங்கிவைத்தாா். முகாமில் மருத்துவா் அருண்குமாா் தலைமையிலான மருத்துவக்குழுவினா் பொதுமக்களுக்கு உடல் வெப்பநிலை, ஆக்ஸிஜன் அளவு கண்டறிந்து மருந்துகள் மற்றும் மாத்திரைகள் வழங்கினா். முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT