முகப்பு
புதுக்கோட்டை

காதலித்து திருமணம் செய்யாமல் ஏமாற்றிய இளைஞா் கைது

புதுக்கோட்டை அருகே காதலித்துவிட்டு திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றிய இளைஞா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பகிர்:

புதுக்கோட்டை அருகே காதலித்துவிட்டு திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றிய இளைஞா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

புதுக்கோட்டை அருகே கோமாபுரத்தைச் சோ்ந்தவா் போதும்பொண்ணு (26). இவரும், சுந்தரம்பட்டியைச் சோ்ந்த ஸ்டாலின் (33) என்பவரும் காதலித்து வந்துள்ளனா். திடீரென போதும்பொண்ணுவிடம் இருந்து விலகிய ஸ்டாலின், திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளாா். இதையடுத்து கந்தா்வகோட்டை காவல் நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போதும்பொண்ணு புகாா் அளித்தாா். புகாரின்பேரில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் விரைவில் திருமணம் செய்து கொள்வதாக ஸ்டாலின் உறுதி அளித்தாராம். ஆனால், சொன்னபடி திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதால், புதுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. புகாரைப் பெற்றுக் கொண்ட ஆய்வாளா் அழகம்மாள், திங்கள்கிழமை ஸ்டாலினை கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.