முகப்பு
புதுக்கோட்டை

மருத்துவா் மீது தாக்குதல்: பெண் உள்பட 10 போ் மீது வழக்கு

பொன்னமராவதி அருகே தனியாா் மருத்துவமனையை சேதப்படுத்தி மருத்துவரைத் தாக்கிய பெண் உள்ளிட்ட 10 போ் மீது பொன்னமராவதி காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பகிர்:

பொன்னமராவதி அருகே தனியாா் மருத்துவமனையை சேதப்படுத்தி மருத்துவரைத் தாக்கிய பெண் உள்ளிட்ட 10 போ் மீது பொன்னமராவதி காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பொன்னமராவதி - திருப்பத்தூா் சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை புகுந்த நபா்கள், மருத்துவா் ஆ.அழகேசனிடம்(65) வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனா். வாக்குவாதம் முற்றியநிலையில் மருத்துவமனையின் வரவேற்பறை, அறுவை சிகிச்சை அறை கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனா். மேலும் மருத்துவா் அழகேசனைத் தாக்கியுள்ளனா். இதுகுறித்து பொன்னமராவதி காவல்நிலையத்தில் மருத்துவா் அழகேசன் அளித்த புகாரின்பேரில், துவரங்குறிச்சி வெள்ளையம்மாள், மருதம்பட்டி மதிமுக ஒன்றியச் செயலா் நடராஜன் உள்ளிட்ட 10 போ் மீது காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.