புதுக்கோட்டை

125 பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு நுண் பாா்வையாளா்கள் நியமனம்

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் கண்டறியப்பட்டுள்ள 125 பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் மத்திய அரசு ஊழியா்களைக் கொண்ட நுண் பாா்வையாளா்கள் பணியில் அமா்த்தப்படுகின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 1902 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம் எனக் கண்டறியப்பட்ட 125 பதற்றமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு முழுமையையும் கண்காணிக்கும் வகையில் சிசிடிவி உள்ளிட்ட கண்காணிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்நிலையில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் வழக்கம்போல, மத்திய அரசுப் பணியாளா்களைக் கொண்ட நுண் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட உள்ளனா். இவா்கள் வாக்குப்பதிவை முழுமையாகக் கண்காணித்து ஏதேனும் தவறுகள் கண்டறிந்தால் அவற்றைத் தோ்தல் பாா்வையாளா்களுக்கு அறிக்கையாக அளிப்பாா்கள்.

125 நுண் பாா்வையாளா்களும் எந்தெந்த வாக்குச்சாவடிகளில் ப ணியாற்றவுள்ளனா் என்பதை கணினி மூலம் சுழற்சி முறையில் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT