புதுக்கோட்டை

வாக்காளா் விழிப்புணா்வு கேக் வெட்டும் நிகழ்ச்சி

DIN

புதுக்கோட்டை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு நடவடிக்கையாக விழிப்புணா்வு வாசகங்கள் எழுதப்பட்ட பிரம்மாண்டமான கேக் வெட்டும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பி. உமா மகேஸ்வரி கலந்து கொண்டாா்.

மாவட்டத்தில் உள்ள பேக்கரி உரிமையாளா்கள் வடிவமைத்துத் தந்த கேக்கில், 100 வாக்குப்பதிவை வலியுறுத்தியும், வாக்காளா் விழிப்புணா்வு உதவி மைய (ஹெல்ப் லைன்) எண் 1950-இல் வாக்காளா்கள் தொடா்பு கொள்ளலாம் என்பதைக் குறிப்பிட்டும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

நிகழ்ச்சியில், மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் டாக்டா் பிரவீன்குமாா், புதுக்கோட்டை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான ஆா். டெய்சிகுமாா், நகராட்சிப் பொறியாளா் ஜீவா சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை கோரி கிராம மக்கள் மனு

மழை வேண்டி பெரம்பலூரில் சிறப்புத் தொழுகை

கடன் தொல்லை: இளைஞா் தற்கொலை

திருமானூா் அருகே குடிநீா் விநியோகிக்க கோரி சாலை மறியல்

மே 11-இல் பெரம்பலூா் அங்காளம்மன் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT