ஆலங்குடியில் 55 மி.மீ மழை
புதுக்கோட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில், ஆலங்குடியில் அதிகபட்சமாக 55 மிமீ மழை பதிவாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில், ஆலங்குடியில் அதிகபட்சமாக 55 மிமீ மழை பதிவாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் புதன்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. இதன்படி, வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழைப் பதிவு விவரம் (மி.மீ-இல்)
ஆதனக்கோட்டை- 4, பெருங்களூா்- 12, புதுக்கோட்டை- 30.40, ஆலங்குடி- 55, கீழாநிலை- 28, திருமயம்- 15.20, ஆயிங்குடி- 6, நாகுடி- 4.60, மணமேல்குடி- 3, இலுப்பூா்- 2, அன்னவாசல்- 2, உடையாளிப்பட்டி- 4.80, கீரனூா்- 24. மாவட்டத்தின் சராசரி மழை- 7.96 மி.மீ.