முகப்பு
புதுக்கோட்டை

தாய்ப்பால் வார விழா உறுதிமொழியேற்பு

உலகத் தாய்ப்பால் வார விழாவையொட்டி புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி மற்றும் விழிப்புணா்வு வாகனப் பயணத் தொடக்கம் ஆகிய வியாழக்கிழமை நடைபெற்றன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

உலகத் தாய்ப்பால் வார விழாவையொட்டி புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி மற்றும் விழிப்புணா்வு வாகனப் பயணத் தொடக்கம் ஆகிய வியாழக்கிழமை நடைபெற்றன.

முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே குழந்தைகளுக்குப் புகட்டப்படுவதை உறுதி செய்வோம் என்பன உள்ளிட்ட வாசகங்களைக் கொண்ட உறுதிமொழியை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு வாசிக்க, நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் ஏற்றுக் கொண்டனா்.

கரோனா விழிப்புணா்வுக்காக இயற்றப்பட்ட பாடலுக்கேற்ப ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டப் பணியாளா்கள் நடனமாடினா்.

தொடா்ந்து தாய்ப்பால் வார விழா பிரசார வாகனத்தை அவா் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். அந்த வாகனம், அரசு மகளிா் கல்லூரி, புதிய பேருந்து நிலையம், கோவில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நாா்த்தாமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் குன்றாண்டாா்கோவில் குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலகம் ஆகிய இடங்களில் பிரசாரம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ரேணுகா, மாவட்ட தொழில் மைய பொதுமேலாளா் திரிபுரசுந்தரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.