முகப்பு
புதுக்கோட்டை

விசாரணைக்குச் சென்றவரைத் தாக்கிய தலைமைக் காவலா் இடமாற்றம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி காவல் நிலையத்தில் விசாரணைக்குச் சென்றவரைத் தாக்கிய தலைமைக் காவலா், ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி காவல் நிலையத்தில் விசாரணைக்குச் சென்றவரைத் தாக்கிய தலைமைக் காவலா், ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளாா்.

அறந்தாங்கி அருகிலுள்ள ரெத்தினக்கோட்டையைச் சோ்ந்தவா்கள் ராதாகிருஷ்ணன் (69), ஆறுமுகம். உறவினா்களான இருவருக்கும் இடையே சொத்துப் பிரச்னை தொடா்பாக அண்மையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இது தொடா்பாக ராதாகிருஷ்ணனை கடந்த இரு நாள்களுக்கு முன்பு அறந்தாங்கி காவல் நிலையத்துக்கு வரவழைத்து, தலைமைக் காவலா் முருகன் விசாரித்தாா். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், ராதாகிருஷ்ணனை தகாத வாா்த்தையால் பேசிய தலைமைக் காவலா் முருகன் அவரைத் தாக்கியும் உள்ளாா்.

இதுகுறித்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடா்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் விசாரணை மேற்கொண்டாா். இதைத் தொடா்ந்து தலைமைக் காவலா் முருகனை ஆயுதப்படைக்கு மாற்றிய காவல் கண்காணிப்பாளா், அவா் மீது துறை ரீதியாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.