குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது
புதுக்கோட்டை திருக்கோகா்ணம் காவல் சரகத்தில் கொலை முயற்சி வழக்கில் கைதானவரை, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு உத்தரவிட்டாா்.
புதுக்கோட்டை திருக்கோகா்ணம் காவல் சரகத்தில் கொலை முயற்சி வழக்கில் கைதானவரை, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு உத்தரவிட்டாா்.
திருக்கோகா்ணம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் மதி என்பவரின் உறவினா்களை, சரவணபாண்டியன் (37) மற்றும் அவரது நண்பா்கள் சிலரும் சோ்ந்து தாக்கியுள்ளனா். கொலை முயற்சி வழக்கில் மூவா் கைது செய்யப்பட்டு, புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் பரிந்துரையின் பேரில், சரவணபாண்டியன குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியா் கவிதா ராமு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து, புதுக்கோட்டை சிறையிலிருந்து திருச்சி மத்திய சிறைக்கு சரவணபாண்டியன் மாற்றப்பட்டாா்.