புதுக்கோட்டை

பொன்னமராவதியில் புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கம்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் வெள்ளக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கத்தை மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சா்ஆா்.எஸ். ராஜகண்ணப்பன், சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

இந்த நிகழ்வுக்கு புதுக்கோட்டை ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். நிகழ்வில் சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி பேசியது:

திருமயம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, பொன்னமராவதி பகுதியிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு ஏற்கனவே நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்துகள் இயக்கம் வெள்ளிக்கிழமை மீண்டும் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

பொன்னமராவதியிலிருந்து பழனி, திருப்பூா் போன்ற பகுதிகளுக்கு பேருந்து இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசுப் பேருந்துகளின் லாபத்தை கருத்தில் கொள்ளாமல், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன என்றாா்.

போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் பேசியது: தமிழகத்தில் 60 சதவிகித மகளிா், கட்டணமில்லா பேருந்துகளில் பயணித்து வருகின்றனா். பொன்னமராவதி பேருந்துநிலையத்திலிருந்து 14 வழித்தடங்களில் 12 பேருந்துகள் இயக்கம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் 5 பேருந்துகள் வழித்தட மாற்றமும், 7 பேருந்துகள் நிறுத்திய பேருந்து இயக்கமும் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. இதில் 8 பேருந்துகள் நகரப்பேருந்துகளாகும் என்றாா்.

நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் புதுக்கோட்டை வை. முத்துராஜா, கந்தா்வகோட்டை உறுப்பினா் சின்னத்துரை, முன்னாள் அரசு வழக்குரைஞா் செல்லப்பாண்டியன், அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ராஜ்மோகன், பொது மேலாளா் இளங்கோவன், வருவாய்க் கோட்டாட்சியா் தண்டாயுதபாணி, ஒன்றியக் குழுத் தலைவா் அ.சுதா, திமுக ஒன்றியச் செயலா் அடைக்கலமணி, நகரச் செயலா் அ.அழகப்பன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் எஸ்.ஜெயராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT