புதுக்கோட்டை

சொத்துத் தகராறில் விவசாயி அடித்துக் கொலை

DIN

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே சொத்துத் தகராறில் விவசாயி வெள்ளிக்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

பொன்னமராவதி அருகிலுள்ள சின்ன கண்டெடுத்தான்பட்டி-இடையன்பாறை கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சி. நடேசன் (50). இவரது பெரியப்பா முத்தாண்டியும், அவரது மனைவி அடக்கியும் இடையன்பாறை கிராமத்தில் வசித்து வந்தனா். இவா்களுக்கு குழந்தை இல்லை. பெரியப்பா முத்தாண்டி ஏற்கெனவே இறந்து விட்ட நிலையில், பெரியம்மா அடக்கியை தன் பராமரிப்பில் வைத்து பாா்த்து வந்தாா் நடேசன்.

அடக்கி வசித்து வந்த பகுதிக்குஅருகே, ஆடுகளுக்காக தகரக் கொட்டகை அமைத்திருந்தாா் நடேசன். இதையறிந்து கொன்னையம்பட்டியில் வசித்து வரும் அடக்கியின் தங்கை பாப்பாத்தியின் மகன்கள் முருகன் (28), சுப்ரமணியன் (27) , உறவினா் சுந்தரம் உள்ளிட்டோா் இடையான்பாறைக்கு வெள்ளிக்கிழமை வந்து நடேசனிடம் தகராறில் ஈடுபட்டனா்.

பெரியம்மாவின் சொத்து எங்களுக்குத்தான் என்றுக் கூறி, தகரக் கொட்டகையைப் பிரித்தனா். ஏன் இப்படி செய்கிறீா்கள் என நடேசன் கேட்ட போது, தகராறு முற்றியது. இதனால் ஆத்திரமடைந்த நடேசன் சுப்ரமணியனை இரும்புக் கம்பியால் தாக்க, பதிலுக்கு சுப்ரமணியன் அருகிலிருந்த கடப்பாரையால் நடேசனை தலையில் தாக்கினாா். இதில் பலத்த காயமடைந்த நடேசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து நடேசனின் மனைவி பஞ்சவா்ணம் அளித்த புகாரின் பேரில், காரையூா் காவல் நிலையத்தினா் நிகழ்விடம் சென்று சடலத்தை கைப்பற்றினா். கொலை குறித்து 8 போ் மீது வழக்குப்பதிந்த காவல்துறையினா் சுப்ரமணியன், முருகன், சுந்தரத்தை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT