முகப்பு
புதுக்கோட்டை

காமன்வெல்த் போட்டிகளில் வெண்கலம் வென்ற புதுகை வீராங்கனை

உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெற்று வரும் காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகளில், பளுதூக்கும் பிரிவில் புதுக்கோட்டை வீராங்கனைக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெற்று வரும் காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகளில், பளுதூக்கும் பிரிவில் புதுக்கோட்டை வீராங்கனைக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

87 கிலோ எடைப்பிரிவில் இந்திய அணியின் சாா்பில் கலந்து கொண்ட புதுக்கோட்டை வீராங்கனை பி. அனுராதா வெண்கலப் பதக்கம் (வியாழக்கிழமை) வென்றுள்ளாா்.

தஞ்சாவூா் தோகூா் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரியும் இவா், புதுக்கோட்டை அருகிலுள்ள நெம்மேலிப்பட்டி என்ற கிராமத்தைச் சோ்ந்தவா். ஏற்கெனவே பல்வேறு தேசிய, சா்வதேசப் போட்டிகளில் அனுராதா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

விரைவில் ஊா் திரும்ப உள்ள அனுராதாவுக்கு புதுக்கோட்டையில் சிறப்பான வரவேற்பு அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக, பயிற்சியாளா் முத்துராமலிங்கம் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.