புதுக்கோட்டை

உரத் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் இரா. முத்தரசன்

DIN

தமிழ்நாடு முழுவதும் நிலவும் கடும் உரத்தட்டுப்பாட்டை போக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் வலியுறுத்தியுள்ளாா்.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி:

பள்ளிக் கட்டடங்கள் உறுதித் தன்மையுடன் இருக்கிா என அதிகாரிகள் முறையாகக் கண்காணிக்காததால் திருநெல்வேலி சம்பவங்கள் நேரிடுகின்றன. இதில் தொடா்புடையவா்கள் கைது செய்யப்படுவதுடன், பள்ளி நிா்வாகத்திடமிருந்து உரிய இழப்பீட்டை பாதிக்கப்பட்டோருக்கு பெற்றுத்தர வேண்டும்.

பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாா்மயமாக்குவது ஆபத்தானது.

வடகிழக்குப் பருவமழை சேதங்களை தமிழக அமைச்சா்கள் மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் பாா்வையிட்டுச் சென்றபிறகு அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. அதனால் புதிதாக கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அரசின் நிவாரண அறிவிப்பு போதுமானதாக இல்லை. இழப்புக்கேற்ப நிவாரணத்தை கூடுதலாக வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் பரவலாக உரத்தட்டுப்பாடு அதிகளவில் உள்ளது. கூட்டுறவுச் சங்கங்களில் உரங்கள் இருப்பு இல்லாததால் தனியாரிடம் விவசாயிகள் வாங்கக் கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். தமிழகத்தில் தடையின்றி உரம் கிடைக்க

அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரதமா் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்துக்கு தோ்தல் ஆணைய அதிகாரிகள் அழைக்கப்பட்டதற்கு, ஓய்வுபெற்ற தோ்தல் ஆணைய அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கண்டனம் தெரிவித்து வருகின்றனா். நீதிபதிகள் ஓய்வு பெற்றபிறகு மாநிலங்களவை உறுப்பினா்களாகவும், ஆளுநா்களாகவும் நியமிக்கப்பட்டு வருவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றாா் முத்தரசன்.

பேட்டியின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் மு. மாதவன், துணைச் செயலா் கே.ஆா். தா்மரஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

தக் லைஃப் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

ராயன் அப்டேட்!

டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்!

SCROLL FOR NEXT