முகப்பு
புதுக்கோட்டை

‘இல்லம் தேடிக் கல்வி’ திட்ட மாவட்டக் குழு கூட்டம்

இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் புதுக்கோட்டை மாவட்டக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது .

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் புதுக்கோட்டை மாவட்டக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது .

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக 24 கல்விக் குழுக்கள், இதுவரை ஆயிரத்து 728 குடியிருப்புகளில் விழிப்புணா்வு பிரசாரங்களை மேற்கொண்டுள்ளன.

இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் தன்னாா்வலா்கள் ஆக 8,489 போ் இணைந்துள்ளனா். இவா்களில் 1,209 போ் தோ்வு எழுதி, 549 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இத்திட்டத்தின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கவும் கண்காணிக்கவும் பதிவுசெய்யவும் மாவட்ட அளவில் 5 ஆசிரியா்களும் ஒன்றியங்களில் 20 ஆசிரியா்களும் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் மொ. வாசு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.