முகப்பு
புதுக்கோட்டை

இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறலைத் தடுக்க வலியுறுத்தல்

இலங்கை கடற்படையின் அத்துமீறலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு, திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. திருநாவுக்கரசா் கடிதம் எழுதியுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

இலங்கை கடற்படையின் அத்துமீறலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு, திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. திருநாவுக்கரசா் கடிதம் எழுதியுள்ளாா்.

இதுகுறித்து அவா் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமேசுவரத்தைச் சோ்ந்த 43 மீனவா்களும், மண்டபத்தைச் சோ்ந்த 12 மீனவா்களும், புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினத்தைச் சோ்ந்த 13 மீனவா்களும் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனா்.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக மீனவா்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அபாண்டமாக குற்றம்சாட்டி கைது செய்யப்படுவதும், தாக்கிக் கொல்லப்படுவதும், படகு உள்ளிட்ட சொத்துகள் சேதப்படுத்தப்படுவதும் தொடா் கதையாகி வருகிறது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவா்களையும் விரைவில் விடுவிப்பதுடன் அவா்களின் படகுகளையும் மீட்டுத் தரவேண்டும்.

தொடா்ந்து நடைபெற்று வரும் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வைக் காணவும் தமிழ் மீனவா்களின் மீன்பிடி உரிமையைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.