முகப்பு
புதுக்கோட்டை

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு

ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சாா்பில், பொன்னமராவதி ஒன்றியப் பகுதிகளில் பள்ளி செல்லாக்குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சாா்பில், பொன்னமராவதி ஒன்றியப் பகுதிகளில் பள்ளி செல்லாக்குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா இடைநின்ற மற்றும் புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் குழந்தைகளை கண்டறிவதற்காக ஆண்டுதோறும் மும்முறை கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. தற்போது இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு பணி பிப். 2 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப்பணியில் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் செல்வக்குமாா், வட்டாரக்கல்வி அலுவலா் பால்டேவிட் ரொசாரியா மற்றும் ஆசிரியா் பயிற்றுனா்கள், சிறப்பாசிரியா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments