ஹார்திக் பாண்டியா இல்லை: தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!
ஐபிஎல் 2026 சீசன் லீக் சுற்றின் 8-ஆவது போட்டி குறித்து...
ஐபிஎல் 2026 சீசன் லீக் சுற்றின் 8-ஆவது போட்டியில் மும்பைக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் போட்டியில் இருந்து விலகியிருப்பதால், சூர்யகுமார் அணியை வழிநடத்துகிறார்.
தில்லியில் அருண் ஜேட்லி திடலில் நடைபெறும் இந்தப் போட்டியில் ஹார்திக் பாண்டியா இல்லாதது மும்பை அணிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
Advertisement
தில்லி அணியில் எந்த மாற்றமும் இல்லை என அதன் கேப்டன் அக்ஷர் படேல் கூறியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
தில்லி கேபிடல்ஸ்: கே.எல். ராகுல், பதும் நிசாங்கா, நிதீஷ் ராணா, அக்ஷர் படேல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர், விப்ராஜ் நிகாம், லுங்கி நிகிடி, குல்தீப் யாதவ், நடராஜன், முகேஷ் குமார்.
மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா, ரியான் ரிக்கல்டன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், நமன் திர், ஷர்பானே ரூதர்ஃபோர்ட், மிட்செல் சான்ட்னர், கார்பின் போஷ், ஷர்துல் தாக்குர், தீபக் சஹார், ஜஸ்ப்ரீத் பும்ரா.
இரண்டு அணிகளும் இதுவரை தலா 1 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதால், இந்தப் போட்டி முக்கியமானதாகப் பார்க்கபடுகிறது.
தில்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் இரண்டுமே பிளேஆஃப்ஸ் செல்லும் வாய்ப்புள்ள அணிகள் என்பதால் இந்தப் போட்டி முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.