நம்.4 இடத்தில் விளையாடியது தன்னம்பிக்கை அளித்தது: சமீர் ரிஸ்வி
ஆட்ட நாயகன் விருது வென்ற தில்லி கேபிடல்ஸ் அணியின் சமீர் ரிஸ்வி பேட்டி குறித்து...
லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணி அசத்தல் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இளம் வீரர் சமீர் ரிஸ்வி 70 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது வென்றார்.
முதலில் பேட்டிங் செய்த லக்னௌ அணி 141 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து விளையாடிய தில்லி அணி 17.1 ஓவர்களில் 145/4 ரன்கள் எடுத்து வென்றது.
முன்னதாக சிஎஸ்கே அணியில் அதிக விலைக்கு வாங்கபட்ட சமீர் ரிஸ்வி கடந்த ஏலத்தில் தில்லி கேபிடல்ஸ் அணிக்கு மாறினார். கடந்த போட்டியில் இம்பாக்ட் வீரராக களமிறங்கிய சமீர் ரிஸ்வி அவரது மிகச்சிறந்த விளையாட்டை விளையாடி ஆட்ட நாயகன் விருது வென்றார்.
Advertisement
Advertisement
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதான ஆட்ட நாயகன் விருது வென்ற பிறகு சமீர் ரிஸ்வி பேசியிருப்பதாவது:
போட்டிக்கு முன்னதாக, பயிற்சியாளர்கள் என்னிடம், ‘நீ நம்.4ல் களமிறங்கப்போகிறாய். உன்னை நம்புகிறோம். நீ உனது இயல்பான ஆட்டத்தை விளையாடு’ எனக் கூறினார்கள்.
நான் உ.பி. அல்லது உபிடி20 லீக்கில் நம்.4 இடத்தில் விளையாடினேன். அதே மாதிரியான இடம் ஐபிஎல் போட்டிகளில் கிடைப்பது எனக்கு தன்னம்பிக்கையை அளித்தது.
இது எனக்கு மிகப்பெரிய வாய்ப்பு. என்னுடைய இயல்பான ஆட்டத்தை ஆட பயிற்சியாளர்கள் எனக்கு சுதந்திரம் அளித்தார்கள். அதனால், கிடைத்த இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டேன்.
ஐபிஎல் போட்டிகளில் பெரிதாக விளையாட வில்லை. இருப்பினும் தொடர்ச்சியாக நன்றாக விளையாட முயல்வேன். இந்த இன்னிங்ஸை மறந்துவிட்டு அடுத்த போட்டிக்குத் தயார்குவேன் என்றார்.
Batting at number four gave me confidence: says DC batter Rizvi
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.