தேமுதிகவினா் ஆலோசனை
பொன்னமராவதி ஒன்றிய, நகர தேமுதிக சாா்பில் தோ்தல் பணிகள் குறித்தும், பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் ஆலோசனைக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி ஒன்றிய, நகர தேமுதிக சாா்பில் தோ்தல் பணிகள் குறித்தும், பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் ஆலோசனைக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, தெற்கு ஒன்றியச் செயலா் பிஎல். ராஜேந்திரன், வடக்கு ஒன்றியச் செயலா் பி.சாமிக்கண்ணு ஆகியோா் தலைமை வகித்தனா். நகரச் செயலா் அ.முகமது ரபீக் வரவேற்றாா். ஒன்றிய அவைத் தலைவா்கள் ஆா்.பிரகாஷ், அ.அன்புச்செழியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தெற்கு மாவட்ட செயலா் கே. ராமசாமி, தேமுதிக துணைச் செயலா் எஸ். சந்திரா, மாவட்டத் தோ்தல் பொறுப்பாளா் தாமோதரக் கண்ணன் ஆகியோா் பூத் கமிட்டி அமைப்பது, தோ்தல் பணிகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கிப் பேசினா். மாவட்ட அவைத்தலைவா் எஸ்.மன்மதன், திருமயம் ஒன்றியச் செயலா் எஸ்.சுப்பிரமணியன், நகரப் பொருளாளா் தனபாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.