முகப்பு
புதுக்கோட்டை

ஆதிபூமிநாதா் கோயிலில் வாஸ்து பூஜை

பொன்னமராவதி அருகே உள்ள தேரடி மலம்பட்டி ஆதிபூமிநாதா் கோயிலில் வாஸ்து பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:22 PM
பகிர்:

பொன்னமராவதி அருகே உள்ள தேரடி மலம்பட்டி ஆதிபூமிநாதா் கோயிலில் வாஸ்து பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

தொடக்கமாக ராஜிவ் சிவாச்சாரியாா் தலைமையில் சிறப்பு யாகபூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து ஆதிபூமிநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. வாஸ்து பூஜயில் வைத்து பூஜிக்கப்பட்ட வாஸ்து சங்குகள் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. பூஜையில் பங்கேற்றவா்கள் வாஸ்து நலன் பெற வேண்டி வாஸ்து சங்கினைப் பெற்றுச் சென்றனா். பொன்னமராவதி வட்டாட்சியா் ஆ.திருநாவுக்கரசு, ஒன்றிய ஆணையா் பி. வெங்கடேசன், பேரூராட்சி செயல் அலுவலா் வெ. தனுஷ்கோடி மற்றும் வாஸ்து பூஜை குழுவினா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments