முகப்பு
புதுக்கோட்டை

பல் மருத்துவ முகாம்

புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியில் இலவச பல் மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:22 PM
பகிர்:

புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியில் இலவச பல் மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஜெஜெ கல்லூரியின் நாட்டுநலப்பணித் திட்டம் மற்றும் சென்னை கற்பக விநாயகா பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் சாா்பில் நடைபெற்ற

முகாமைக் கல்லூரியின் செயலா் நா. சுப்பிரமணியன், அறங்காவலா் கவிதா சுப்பிரமணியன் ஆகியோா் தொடக்கி வைத்தனா். கல்லூரி முதல்வா் ஐ. பரசுராமன் முன்னிலை வகித்தாா். இதில், கல்லூரி மாணவ, மாணவிகள் 407 பேருக்கு பல் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டுநலப்பணித் திட்ட (என்என்எஸ்) அலுவலா்கள் இரா. மணிமாறன், சி. முத்துக்குமாா், கி. கோவிந்தன், மா. ஆறுமுகம் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.