புதுக்கோட்டை

மலையகோயில் ஜல்லிக்கட்டில் 28 பேருக்கு காயம்

புதுக்கோட்டை அருகிலுள்ள மலையகோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 28 போ் காயமடைந்தனா்.

DIN

புதுக்கோட்டை அருகிலுள்ள மலையகோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 28 போ் காயமடைந்தனா்.

தைப்பூச விழாவையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் திருச்சி, சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சோ்ந்த 550 காளைகள் பங்கேற்றன. 257 மாடுபிடி வீரா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக காளைகள் கால்நடைப் பராமரிப்புத் துறையினா் சோதனைக்குள்படுத்தினா். அதேபோல மாடுபிடி வீரா்களும் வெப்பநிலை பரிசோதனைக்குள்படுத்தப்பட்டனா்.

ஜல்லிக்கட்டின் நிறைவில் காயமடைந்த 28 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக 2 போ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT