முகப்பு
புதுக்கோட்டை

நீட் தோ்வை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வை தமிழ்நாட்டில் இருந்து முற்றிலும் அகற்ற வலியுறுத்தி, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியினா் புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

நீட் தோ்வை தமிழ்நாட்டில் இருந்து முற்றிலும் அகற்ற வலியுறுத்தி, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியினா் புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்டத் தலைவா் எம்ஏஜெ. யூசுப்ராஜா தலைமை வகித்தாா். நகரச் செயலா் எம். முகமது யாசா், பழனிபாபா பேரவைச் செயலா் கே. அல்லாபிச்சை முன்னிலை வகித்தனா்.

கட்சியின் பொதுச் செயலா் கேஆா்எம். ஆதிதிராவிடா், பொருளாளா் என்எஸ்எம். நஜ்முதீன், மக்கள் விடுதலை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் க.சி. விடுதலைக்குமரன் உள்ளிட்டோரும் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.