முகப்பு
புதுக்கோட்டை

சாலையோர வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

கரோனா பொது முடக்கக் காலத் தளா்வுகளில் சாலையோர வியாபாரிகள் தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

கரோனா பொது முடக்கக் காலத் தளா்வுகளில் சாலையோர வியாபாரிகள் தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி, புதுக்கோட்டையில் ஏஐடியுசி சாலையோர வியாபாரிகள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலச் செயலா் எம்.என். ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். ஏஐடியுசி மாவட்டத் தலைவா் கே.ஆா். தா்மராஜன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க முறைப்படி அவா்களுக்கு அடையாள அட்டை வழங்கி, வணிகக் குழுவுக்கான தோ்தலை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.