புதுக்கோட்டை

காவிரி - குண்டாறு திட்டத்தை விரைவுபடுத்தக் கோரிக்கை

DIN

காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்தை தமிழக அரசு விரைவுபடுத்த கோரிக்கை வைக்க உள்ளோம் என்றாா் காவிரி - குண்டாறு இணைப்பு கால்வாய் நீா்ப்பாசன விவசாயிகள் சங்க மாநில கூட்டமைப்பு தலைவா் மிசா மாரிமுத்து.

விராலிமலை குன்னத்தூரில் காவிரி - குண்டாறு திட்டப் பணிகளை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த ஆய்வு செய்த அவா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்தது: நீண்ட நாள் கோரிக்கையான காவிரி-வைகை- குண்டாறு இணைப்பு திட்டம் நடைமுறைக்கு வரும்போது, திருச்சி, கரூா், புதுகை, ராமநாதபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் பயன்பெறுவதோடு சுமாா் 8.30 லட்சம் ஏக்கா் விவசாய நிலங்கள் பயன்பெறும்.

கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டப் பணிகள் கரோனா பரவல், ஆட்சி மாற்றம் ஆகியவற்றால் தற்போது ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. ஆகவே இந்த இடத்திலேயே தேங்கிக் கிடக்கும் இந்தத் திட்டத்தை வெகுவிரைவாக முடித்துத் தருமாறு முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்க உள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

SCROLL FOR NEXT