முகப்பு
புதுக்கோட்டை

சமூக ஆா்வலா்களுக்கு விருதுகள் வழங்கல்

புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பணியேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பணியேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு. சங்கத் தலைவா் டாக்டா் பி. தனசேகரன் தலைமை வகித்தாா். செயலா் செந்தில் வரவேற்றாா். ரோட்டரி மாவட்ட ஆளுநா் (தோ்வு) ஆனந்த ஜோதிராஜ்குமாா் கலந்து கொண்டு, 2021-22ஆம் ஆண்டின் புதிய தலைவா் துரைமணி, செயலா் பாஸ்கா், பொருளாளா் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா கலந்து கொண்டு, சிறப்பாக பணியாற்றிய மருத்துவா்கள் தனசேகரன், வீ.சி. சுபாஷ்காந்தி, சரவணன், அரவிந்த்குமாா், கே. சரவணன், காா்த்திக் தெய்வநாயகம், கேசவபாலாஜி, சமூக ஆா்வலா் பெல் சுப்பிரமணியன், கல்வியாளா் கவிஞா் தங்கம்மூா்த்தி, செவிலியா்கள் இந்திரா காந்தி, தேன்மொழி , தனலெட்சுமி, விஜயா ராஜேந்திரன் ஆகியோருக்கு விருதுகளை வழங்கிப் பேசினாா். புதிய செயலா் பாஸ்கா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.