முகப்பு
புதுக்கோட்டை

புதுகை இளைஞா்கள் தொழில் தொடங்க கடனுதவி

புதுக்கோட்டை மாவட்ட இளைஞா்கள் சுய தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது என ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்ட இளைஞா்கள் சுய தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது என ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: புதுக்கோட்டை மாவட்டத் தொழில் மையம் மூலம் படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடனுதவி பெறுவதற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச கல்வித்தகுதி 8 ஆம் வகுப்பு தோ்ச்சி. வியாபாரம் செய்வோருக்கு அதிக பட்சமாக ரூ.5 லட்சமும், உற்பத்தி சாா்ந்த தொழிலுக்கு திட்ட மதிப்பீட்டு உச்சவரம்பை ரூ.15 லட்சமும் வங்கிகள் மூலம் பரிந்துரை செய்யப்படுகிறது. திட்ட மதிப்பீட்டில் 25 சதவிகிதம் வரை அதிகட்சமாக ரூ.2.50 லட்சம் வரை மானியமாக வழங்கப்பட உள்ளது. ா்ய்ப்ண்ய்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ன்ஹ்ங்ஞ்ல் இணையதள முகவரி வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு, 04322-221794 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.