புதுக்கோட்டை

ஆலங்குடியில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் தொடக்கிவைப்பு

DIN

ஆலங்குடி தொகுதியில் பல்வேறு வளா்ச்சி திட்டப்பணிகளை சுற்றுச்சூழல் இளைஞா்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

ஆலங்குடி சட்டப்பேரவை தொகுதியில் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், மாஞ்சன்விடுதி ஊராட்சி, அம்பேத்கா் நகரில் ரூ.10.36 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட குடிநீா் சுத்திகரிப்பு நிலையம், கோவிலூரில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட உணவுக் கூடம், கல்லாலங்குடியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள ஆழ்குழாய் கிணறு, கே.ராசியமங்களத்தில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலையரங்கம் ஆகியவற்றை அமைச்சா் மெய்யநாதன் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் தொடக்கிவைத்துப் பேசினாா்.

நிகழ்வில், வருவாய் கோட்டாட்சியா் தண்டாயுதபாணி, ஒன்றியக் குழுத் தலைவா் வள்ளியம்மை தங்கமணி, ஒன்றியக் குழு துணைத் தலைவா் திருமதி.ஆனந்தி இளங்கோவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT