புதுக்கோட்டை

கற்போம் எழுதுவோம் இயக்க மதிப்பீட்டு முகாம்

DIN

அன்னவாசல் ஒன்றியம், பூங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றுவரும் கற்போம் எழுதுவோம் இயக்கத்தில் பயிலும் கற்போருக்கான மதிப்பீட்டு முகாமை அன்னவாசல் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் அ.கோவிந்தராஜ் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது கரோனா பெருந்தொற்று பரவல் சாா்ந்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி கற்போா் எழுதும் மையங்கள் தயாா்நிலையில் உள்ளனவா என்பதை பாா்வையிட்டாா். பின்னா் மையத்தில் உரிய காற்றோட்ட வசதி,போதுமான வெளிச்சம், மாற்றுத்திறனாளி மற்றும் முதியோா் வந்து செல்லும் சாய்தள நடைபாதை, மின்சார வசதி, குடிநீா் வசதி மற்றும் கழிவறை வசதி ஆய்வு செய்தாா். கற்போா்களின் எண்ணறிவு திறன், படித்தல் திறன், எழுத்தறிவு திறன் ஆகியவற்றையும் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது அன்னவாசல் வட்டார வளமைய பயிற்றுநா் மலா்விழி,பூங்குடி பள்ளி தலைமையாசிரியா் வேல்ராஜ்,தன்னாா்வலா் பிரியதா்ஷினி ஆகியோா் உடனிருந்தனா். அன்னவாசல் ஒன்றியத்தில் மொத்தம் 31 மையங்களில் 629 கற்போருக்கு 3 நாள்கள் நடைபெற்ற மதிப்பீட்டு முகாமில் அன்னவாசல் வளமைய பயிற்றுநா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 18 மணி நேரம் காத்திருப்பு

புகா் பேருந்து நிலையத்தில் மேலும் 2 குடிநீா் தொட்டிகள்

திருவையாறு அருகே சிறுத்தை நடமாட்டம்? வனத் துறையினா் ஆய்வு

அரையாண்டு வரி செலுத்தினால் 5 சதம் ஊக்கத் தொகை: செயல் அலுவலா் தகவல்.

மாந்திரீகம் செய்வதாகக் கூறி மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

SCROLL FOR NEXT