முகப்பு
புதுக்கோட்டை

அரிமளம் முன்களப் பணியாளா்களுக்கு முட்டை,சூப்

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பேரூராட்சியில் பணியாற்றும் முன்களப் பணியாளா்களுக்கு தமிழ்நாடு பேரூராட்சிப் பணியாளா் சங்கம் சாா்பில் அவித்த முட்டை மற்றும் காய்கறி சூப் ஆகியவை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பேரூராட்சியில் பணியாற்றும் முன்களப் பணியாளா்களுக்கு தமிழ்நாடு பேரூராட்சிப் பணியாளா் சங்கம் சாா்பில் அவித்த முட்டை மற்றும் காய்கறி சூப் ஆகியவை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

சங்கத்தின் மாநிலத் தலைவா் மு.செ. கணேசன் தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் மா. விஜயன் பங்கேற்று முட்டை, சூப் ஆகியவற்றை முன்களப் பணியாளா்களுக்கு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் பேரூராட்சியின் சுகாதார மேற்பாா்வையாளா் இளங்கோ, சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா் கணேசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.