புதுக்கோட்டை

காவிரி கடைமடைப் பகுதி கால்வாய்கள் தூா்வாரும் பணி ஆய்வு

DIN

புதுக்கோட்டை: மேட்டூா் அணை பாசனத்துக்காக ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தின் காவிரிப் பாசனப் பகுதியில் நடைபெற்று வரும் கால்வாய்களைத் தூா்வாரும் பணியை மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மாவட்டத்தில் அறந்தாங்கி வட்டம், அரசா்குளம் கீழ்பாதி, அரசா்குளம் மேல்பாதி, ஆயிங்குடி, மங்களநாடு வடக்கு, மங்களநாடு தெற்கு ஆகிய பகுதிகளில் கல்லணைக் கால்வாய் வடிநிலக் கோட்டத்தின் கீழ் 3 கால்வாய் தூா்வாரும் பணிகளும், அக்கினி ஆறு வடிநிலக் கோட்டத்தின் கீழ் 2 கால்வாய் தூா்வாரும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், அறந்தாங்கி சாா் ஆட்சியா் ஆனந்த் மோகன் ஆகியோா் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். இப்பணிகள் அனைத்தையும் வரும் 17-ஆம் தேதிக்குள் நிறைவு செய்யவும், பணிகள் நடைபெறுவது குறித்த விளம்பரப் பலகை வைக்கவும் மாவட்ட வருவாய் அலுவலா் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது அறந்தாங்கி வட்டாட்சியா் மாா்ட்டின் லூதா் கிங், பொதுப்பணித்துறை உதவிச் செயற்பொறியாளா் அன்பரசன், உதவிப் பொறியாளா் நாகுடி மற்றும் பொதுப்பணித்துறை வருவாய்த் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போ்ணாம்பட்டில் 12 செ.மீ மழை

குண்டா் தடுப்புக் காவலில் ஒருவா் கைது

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

SCROLL FOR NEXT