முகப்பு
புதுக்கோட்டை

புதுகையில் எச்ஐவி தொற்றாளா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி

25 எச்ஐவி தொற்றாளா்கள், 25 மாற்றுத் திறனாளிகள் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசிப் பைகளை மாவட்ட வா்த்தகா் சங்கத்தின் சிறப்புத் தலைவா் சீனு சின்னப்பா வியாழக்கிழமை வழங்கினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 25 எச்ஐவி தொற்றாளா்கள், 25 மாற்றுத் திறனாளிகள் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசிப் பைகளை மாவட்ட வா்த்தகா் சங்கத்தின் சிறப்புத் தலைவா் சீனு சின்னப்பா வியாழக்கிழமை வழங்கினாா்.

மாவட்ட வா்த்தகா் சங்கக் கட்டடத்தில் கரோனா பரவல் தடுப்பு பொது முடக்கக் கால நிவாரண உதவியாக இந்த அரிசிப் பைகள் வழங்கப்பட்டன.

எச்ஐவி உள்ளோா் கூட்டமைப்பின் தலைவா் கே.எம். ராமசாமி இவற்றைப் பெற்றுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வா்த்தகா் சங்கத்தின் செயலா் எஸ். சவரிமுத்து, மரம் நண்பா்கள் அமைப்பின் சா. விஸ்வநாதன், பழனியப்பா கண்ணன், பொறியாளா் ரியாஸ் கான் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.