புதுக்கோட்டை புதிய எஸ்.பி பொறுப்பேற்பு
புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக நிஷா பாா்த்திபன் (படம்) புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக நிஷா பாா்த்திபன் (படம்) புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த லோக. பாலாஜி சரவணன், சென்னை தலைமையிடத்து துணை ஆணையராக அண்மையில் மாற்றம் செய்யப்பட்டாா்.
இதையடுத்து காலியாக இருந்த இந்த இடத்துக்கு, பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த நிஷா பாா்த்திபன் நியமிக்கப்பட்டாா்.
இதைத் தொடா்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்தின் 49-ஆவது காவல் கண்காணிப்பாளராக நிஷா பாா்த்திபன் புதன்கிழமை பகலில் பொறுப்பேற்றுக் கொண்டாா்.