புதுக்கோட்டை

விராலிமலையில் அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டா் பறிமுதல்

DIN

விராலிமலை அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகிலுள்ள ராஜாளிபட்டி சூறையாற்றில் சிலா் லாரி, டிராக்டா் உள்ளிட்ட வாகனங்களில் மணல் அள்ளுவதாக, விராலிமலை காவல் நிலையத் தனிப்பிரிவுக் காவலா் ராஜாராமுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து விராலிமலை காவல் நிலையக் காவலா்களுடன் ராஜாராம் அங்கு சென்றாா். அப்போது காவலா்களைக் கண்டதும், டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்த அதிமுகவைச் சோ்ந்த ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினா் குமாா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா்.

இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த காவல்துறையினா், குமாா் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். மேல் நடவடிக்கைக்காக வருவாய்க் கோட்டாட்சியருக்கும் பரிந்துரைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

SCROLL FOR NEXT