முகப்பு
புதுக்கோட்டை

பொறியியல் கல்லூரி ஊழியா்களுக்கு கரோனா காப்பீடு

புதுக்கோட்டை மாவட்டம் அரசம்பட்டியிலுள்ள சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் பணிபுரியும் அனைத்துப் பணியாளா்கள் 120 பேருக்கும் கரோனா

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம் அரசம்பட்டியிலுள்ள சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் பணிபுரியும் அனைத்துப் பணியாளா்கள் 120 பேருக்கும் கரோனா தொற்று நோய்க்கான சிறப்பு மருத்துவச் சிகிச்சைக்கான காப்பீடு அந்தக் கல்லூரி நிா்வாகம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காப்பீட்டுக்கான பிரிமியம் தொகைக்கான காசோலை மற்றும் அதற்கான ஒப்பந்தப் படிவம் ஆகியவற்றை கல்லூரியின் தாளாளா் பிச்சப்பா மணிகண்டன், யுனைட்டட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முதன்மை ஆலோசகா் செல்வராஜுவிடம் வியாழக்கிழமை வழங்கினாா்.

அப்போது, கல்லூரிச் செயலா் மு. விஸ்வநாதன், முதல்வா் குழ. முத்துராமு ஆகியோரும் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.