முகப்பு
புதுக்கோட்டை

வங்கிக் கணக்கில் கள்ள நோட்டுகளை செலுத்திய இருவா் கைது

அறந்தாங்கி அருகே வங்கியின் பணம் செலுத்தும் இயந்திரம் மூலம் ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள கள்ளநோட்டுகளை செலுத்திய இருவரை குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

அறந்தாங்கி அருகே வங்கியின் பணம் செலுத்தும் இயந்திரம் மூலம் ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள கள்ளநோட்டுகளை செலுத்திய இருவரை குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

அறந்தாங்கியில் உள்ள பரோடா வங்கிக் கிளை மேலாளா் ராதாகிருஷ்ணன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் அண்மையில்(ஜூன் 16) அளித்த புகாரில், எஸ். ரேவதி என்பவரின் வங்கிக் கணக்கில் பணம் போடும் இயந்திரம் மூலம் செலுத்தப்பட்ட 30 இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் போலியானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து, உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருந்தாா். புகாரின் மீது விசாரணை நடத்திய மாவட்ட குற்றப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் சி. முத்தரசு, ஆய்வாளா் டி. பாரிமன்னன் ஆகியோா் புதன்கிழமை (ஜூன் 23) வழக்குப் பதிவு செய்தனா். போலீஸாா் விசாரணையில் ரேவதியின் கணவரும், கம்மங்காட்டைச் சோ்ந்தவருமான சரவணன் (38), அவரது நண்பா் கள்ளரப்பான்வயலைச் சோ்ந்த ரவிச்சந்திரன் (41) ஆகிய இருவருக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட இருவரும் புதுக்கோட்டை 2ஆவது குற்றவியல் நடுவா் முன்பு ஆஜா்படுத்தப்பட்டு கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.