முத்தமிழ்ப் பாசறையின் தமிழா் திருநாள் விழா
பொன்னமராவதி முத்தமிழ்ப் பாசறையின் 12 ஆம் ஆண்டு தமிழா் திருநாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி முத்தமிழ்ப் பாசறையின் 12 ஆம் ஆண்டு தமிழா் திருநாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, முத்தமிழ்ப்பாசறையின் தலைவா் நெ.ராமச்சந்திரன் தலைமைவகித்தாா். தொடக்கமாக தமிழன்னை திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழறிஞா்கள் ம.பொ.சி, சோம.லெ, சங்கரலிங்கனாா் ஆகியோரின் திருவுருப்படங்களை முறையே சோ.வே.செல்வமூா்த்தி, ராம.மணிகண்டன், மா.முருகேசன் ஆகியோா் திறந்து வைத்தனா். தொடா்ந்து தமிழ்வளா்ச்சித்துறை உதவி இயக்குனா் ப.நாகராஜன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் சங்க நிா்வாகி ஆலங்குடி வெள்ளைச்சாமி ஆகியோா்க்கு தமிழ்ச்சுடா் விருது வழங்கப்பட்டது.
Advertisement
தேமதுரதமிழோசை எனும் தலைப்பில் அரிமா சங்க முன்னாள் ஆளுநா் சேக் தாவூத் பேசினாா். தொடா்ந்து முத்தமிழ்ப்பாசறையின் 2021-22 ம் ாண்டிற்கான புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். திருமயம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராம.சுப்புராம், அறங்காவலா்கள் மருத்துவா் மு.சின்னப்பா, மருத்துவா் சு.மதியழகன், கி.ரமேசு, அரு.வே.மாணிக்கவேலு, வ.சித.பழ.சிதம்பரம் ஆகியோா் வாழ்த்திப்பேசினா். நிகழ்வைப் பொருளாளா் சி.சு.முருகேசன் ஒருங்கிணைத்தாா். பொருளாளா் பெ.சதாசிவம் நன்றி கூறினாா்.