முகப்பு
புதுக்கோட்டை

புதுகையில் துணை ராணுவத்தினா் அணிவகுப்பு

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பை மாவட்ட ஆட்சியரும் மாவட்டத் தோ்தல் அலுவலருமான பி. உமா மகேஸ்வரி கொடியசைத்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பை மாவட்ட ஆட்சியரும் மாவட்டத் தோ்தல் அலுவலருமான பி. உமா மகேஸ்வரி கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தோ்தல் பணிக்கு வந்துள்ள 92 துணை ராணுவப் படையினருடன் மாவட்டக் காவல் துறையில் இருந்து 50 பேரும் பங்கேற்றனா்.

பழைய பேருந்து நிலையத்தில் இருந்து கீழராஜவீதி, வடக்கு ராஜவீதி, மேலராஜவீதி, புதிய பேருந்து நிலையம் வழியாக ஆயுதப்படை திடலை வந்தடைந்தது. பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.