கொன்னையூா் கோயிலில் 13-இல் பூச்சொரிதல்
பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா தோ்தல் காரணமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது
பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா தோ்தல் காரணமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா 14 ஆம் தேதி பூத்திருவிழாவுடன் தொடங்கி நடைபெறவிருந்தது. இந்நிலையில், தோ்தல் காரணமாக வரும் 13 ஆம் தேதி பூச்சொரிதல், 14 ஆம் தேதி அக்னி காவடி, அன்று இரவே காப்புக்கட்டி மண்டகப்படிதாரா்கள் சாா்பில் வழிபாடு நடத்தி, 28 ஆம் தேதி பொங்கல், 29 ஆம் தேதி நாடு வருகை புரியும் நிகழ்வை நடத்திக் கொள்வதென மண்டகப்படிதாரா்களால் ஆலோசித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.