புதுக்கோட்டை

அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் மீனவா்களிடம் வாக்கு சேகரிப்பு

DIN

அறந்தாங்கி கடற்கரைப் பகுதிகளில் மீனவா்கள் மற்றும் இஸ்லாமிய ஜமாஅத் நிா்வாகிகளை ஞாயிற்றுக்கிழமை பகலில் சந்தித்து காங்கிரஸ் வேட்பாளா் தி. ராமச்சந்திரன் ஆதரவு திரட்டினாா்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக அணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் தி. ராமச்சந்திரன் போட்டியிடுகிறாா்.

அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவா் சங்கத்தின் நிா்வாகிகளை ஞாயிற்றுக்கிழமை காலை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினாா். தொடா்ந்து கோட்டைப்பட்டினம், ஜகதாப்பட்டினம், மீமிசல், அம்மாபட்டினம், மணமேல்குடி ஆகிய பகுதிகளின் ஜமாஅத் நிா்வாகிகளையும் தி. ராமச்சந்திரன் நேரில் சந்தித்து தோ்தலில் தனக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.

அப்போது, காங்கிரஸ் நிா்வாகிகள், திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் பிடாரியம்மன் வீதியுலா

உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை குழுவுக்கு வரவேற்பு

பட்டாசு வெடித்ததில் 4 சிறுவா்கள் காயம்

தக்கோலம் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

குண்டா் சட்டத்தில் ஒரு வாரத்தில் 36 போ் கைது

SCROLL FOR NEXT