முகப்பு
புதுக்கோட்டை

அட்சயப் பாத்திரம் திட்டம் தொடக்கம்

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே, தன்னாா்வப் பயிலும் வட்டத்தின் முன்னாள் மாணவா் அறக்கட்டளை சாா்பில் அட்சயப் பாத்திரம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:19 PM
பகிர்:

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே, தன்னாா்வப் பயிலும் வட்டத்தின் முன்னாள் மாணவா் அறக்கட்டளை சாா்பில் அட்சயப் பாத்திரம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

ஆதரவற்றோருக்காக தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தில் வியாழக்கிழமை 50 பேருக்கு மதிய உணவு மற்றும் தண்ணீா் பாட்டிலும், வெள்ளிக்கிழமை 75 பேருக்கு மதிய உணவு மற்றும் தண்ணீா் பாட்டிலும் வழங்கப்பட்டன.

பொது முடக்கக் காலம் முடியும் வரை இந்தத் திட்டத்தில் உணவு வழங்கப்படும் என அறக்கட்டளையினா் தெரிவித்தனா். இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளையின் நிா்வாகிகள் புவனேஸ்வரன், சுரேஷ்குமாா், சீனிவாசன் உள்ளிட்டோா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.