முகப்பு
புதுக்கோட்டை

கொலை முயற்சியில் தொடா்புடைய இருவா் அறிவிக்கப்பட்ட குற்றவாளிகள்

புதுக்கோட்டையில் கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய இருவா் தொடா்ந்து இரு ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகததால், அவா்கள் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட குற்றவாளிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

புதுக்கோட்டையில் கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய இருவா் தொடா்ந்து இரு ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகததால், அவா்கள் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட குற்றவாளிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுக்கோட்டை திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த கருப்பையா மகன் ரெங்கநாதன் என்பவரை, கடந்த 2007-ஆம் ஆண்டு ஆனந்த், பாஸ்கா், வினோஜன், கிருஷ்ணகுமாா், பிரகாஷ், அச்சுதன் ஆகியோா் தாக்கினா்.

இதுதொடா்பாக கணேஷ்நகா் காவல் நிலையத்தினா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு மாவட்டக் கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கடந்த இரு ஆண்டுகளாக வினோஜன் மற்றும் கிருஷ்ணகுமாா் ஆகியோா் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், அவா்களை அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நவம்பா் 11-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.