புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் வனத்தோட்ட அதிகாரி வீட்டில்ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

DIN

புதுக்கோட்டையில் வனத்தோட்டக் கழக மண்டல மேலாளா் வீட்டில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

அறந்தாங்கி வனத்தோட்டக் கழக மண்டல மேலாளராக இருப்பவா் நேசமணி. இவா், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூா், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஆகிய மண்டலங்களுக்கும் கூடுதல் பொறுப்பு வகிக்கிறாா். இந்நிலையில், திங்கள்கிழமை உளுந்தூா்பேட்டையிலுள்ள வன அலுவலகத்தில் இவா் உள்ளிட்ட அதிகாரிகள் பணியில் இருக்கும்போது, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் திடீா் சோதனை நடத்தினா். இதில், இவா்களிடம் இருந்து

ரூ. 35.60 லட்சம் வரை கணக்கில் வராத ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இதன் தொடா்ச்சியாக புதுக்கோட்டை மச்சுவாடியிலுள்ள வனத்தோட்டக் கழக அலுவலகம் அருகே உள்ள நேசமணியின் வீட்டில் செவ்வாய்க்கிழமை துணைக் காவல் கண்காணிப்பாளா் இமயவரம்பன் தலைமையிலான போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். இதில், அவரது குடும்பத்தினரின் பெயரிலுள்ள சொத்துகளின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், முழு விசாரணைக்குப் பிறகே அதுகுறித்த விவரங்களைத் தெரிவிக்க முடியும் என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

SCROLL FOR NEXT