மாவட்ட கண்காணிப்பு குழுக் கூட்டம்
புதுக்கோட்டை மாவட்ட வளா்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட வளா்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வளா்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவரும் திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான சு. திருநாவுக்கரசா் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு முன்னிலை வகித்தாா்.
மத்திய அரசின் மூலம் நிறைவேற்றப்படும் 38 திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
கூட்டத்தில், ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் கே. நவாஸ்கனி, மாநிலங்களவை உறுப்பினா் எம்எம். அப்துல்லா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் புதுக்கோட்டை வை. முத்துராஜா, கந்தா்வகோட்டை எம். சின்னதுரை, அறந்தாங்கி எஸ்.சி. ராமச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்து கொண்டனா்.