முகப்பு
புதுக்கோட்டை

புதுகையில் 83 மி.மீ மழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 7 மணிவரை பதிவான 24 மணிநேர மழைப்பொழிவில், அதிகபட்சமாக புதுக்கோட்டை நகரில் 83 மி.மீ மழை பதிவானது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 7 மணிவரை பதிவான 24 மணிநேர மழைப்பொழிவில், அதிகபட்சமாக புதுக்கோட்டை நகரில் 83 மி.மீ மழை பதிவானது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதன்கிழமை மாலை மற்றும் இரவில் பரவலாக மழை பெய்தது. இதன்படி, வியாழக்கிழமை காலை 7 மணி வரை பதிவான 24 மணி நேர மழைப்பொழிவு விவரம் (மி.மீ-இல்)

ஆதனக்கோட்டை- 2, புதுக்கோட்டை- 83, ஆலங்குடி- 23.60, கறம்பக்குடி- 18.60, மழையூா்- 8.60, கீழாநிலை- 26, திருமயம்- 2, அரிமளம்- 28, அறந்தாங்கி- 31.20, ஆயிங்குடி- 37.40, மீமிசல்- 19.40, ஆவுடையாா்கோவில்- 30.20, மணமேல்குடி- 13, இலுப்பூா்- 3, குடுமியான்மலை- 41, அன்னவாசல்- 28, உடையாளிப்பட்டி- 4.60, கீரனூா்- 10.20, பொன்னமராவதி- 1.40, காரையூா்- 12.40. மாவட்டத்தின் சராசரி மழை- 19.54 மி.மீ.

இதேபோல, வியாழக்கிழமை மாலையும் புதுக்கோட்டை, பொன்னமராவதி, அன்னவாசல், ஆலங்குடி போன்ற பகுதிகளில் நல்ல மழை பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.