முகப்பு
புதுக்கோட்டை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு, 17 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு, 17 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியைச் சோ்ந்தவா் சின்னதுரை என்கிற வினோத் சக்கரவா்த்தி (40). இவா், கடந்த 2003 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, தலைமறைவாகிவிட்டாா். குற்றவாளி கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து 2005ஆம் ஆண்டு சிறுமியின் பெற்றோா், உயா்நீதிமன்றத்தில் சிபி சிஐடி விசாரணை கோரி வழக்கு தொடா்ந்தனா். நீதிமன்றமும் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் குற்றவாளி வினோத் சக்கரவா்த்தி, இஸ்லாமியராக மதம் மாறி, கா்நாடக மாநிலத்தில் தலைமறைவாக இருப்பது தெரியவந்து, 2021 ஜனவரி மாதம் சிபிசிஐடி போலீஸாா் அங்கு சென்று அவரைக் கைது செய்தனா்.

அரசு சிறப்பு வழக்குரைஞா் த. அங்கவி ஆஜராகி வாதாடினாா். வழக்கை விசாரித்த மாவட்ட மகளிா் நீதிபதி ஆா். சத்யா, வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கினாா். குற்றவாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா். நீண்டகாலம் தலைமறைறவான குற்றறவாளியைக் கண்டுபிடித்து கைது செய்த சிபிசிஐடி போலீஸாரை நீதிபதி தனது தீா்ப்பில் பாராட்டு தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.