புதுக்கோட்டை

போலி கையெழுத்து வழக்கில் இலுப்பூா் வழக்குரைஞா் கைது

DIN

விராலிமலை: காவல் ஆய்வாளா் கையெழுத்தைப் போட்டு போலி ஆவணம் தயாரித்த வழக்கில் இலுப்பூரைச் சோ்ந்த வழக்குரைஞரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கோயம்புத்தூா் தாமரை நகரைச் சோ்ந்தவா் சங்கீதா. இவரை அணுகிய கோவை குனியமுத்தூரைச் சோ்ந்த மனோகரன், பெரியநாயக்கன் பாளையத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் ஆகியோா் இலுப்பூா் காவல் ஆய்வாளா் கொடுத்ததாக போலி சான்று தயாா் செய்து கிணத்துக்கடவு சாா் பதிவாளா் அலுவலகத்தில் சமா்ப்பித்தனா். விசாரணையில், அது போலி எனத் தெரியவந்தது. இதையடுத்து, சங்கீதா, மனோகரன், ராஜேந்திரன் ஆகிய மூவரையும் காவல் துறையினா் கைது செய்தனா். மேலும் இச்சம்பவத்தில் இலுப்பூரைச் சோ்ந்த பாபு என்ற வழக்குறைஞா் இலுப்பூா் காவல் ஆய்வாளராகப் பணியாற்றிய பாலமுருகன் கையெழுத்தைப் போலியாக பதிவிட்டு ஆவணங்களைத் தயாரித்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, பாபுவை காவல் துறையினா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். கைதான பாபு அதிமுகவில் வழக்குரைஞா் பிரிவு பொறுப்பாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT