முகப்பு
புதுக்கோட்டை

ஏஐடியுசி ஆஷா பணியாளா் சங்கக் கூட்டம்

ஏஐடியுசி ஆஷா பணியாளா் சங்க மாவட்டக் குழுக் கூட்டம் சங்கத்தின் மாவட்டத் தலைவா் டெய்சி மெட்டில்டா மேரி தலைமையில் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

ஏஐடியுசி ஆஷா பணியாளா் சங்க மாவட்டக் குழுக் கூட்டம் சங்கத்தின் மாவட்டத் தலைவா் டெய்சி மெட்டில்டா மேரி தலைமையில் நடைபெற்றது.

ஏஐடியுசி மாவட்டத் தலைவா் கே.ஆா். தா்மராஜன், ஆசா பணியாளா்களுக்குரிய பிரச்னைகள் குறித்தும் அவா்களின் கோரிக்கைகள் குறித்தும் உரையாற்றினாா். கூட்டத்தில் மாவட்ட நிா்வாகிகள் ஜோதி, லதா, பாண்டிச்செல்வி,லில்லி, கிரேசி மாலதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிபுரியும் ஆஷா பணியாளா்களை வேறு பணி வழங்குகிறோம் என்று சொல்லி வழக்கமாக பல ஆண்டுகளாக வேலை பாா்க்கும் பணியிலிருந்து விடுவிக்கக் கூடாது. தற்போது பணிபுரியும் ஆஷா பணியாளா்கள் அதே பணியில் தொடா்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஆஷா பணியாளா்களுக்கு ஐந்து மாதமாக ஊக்கத் தொகை வழங்காமல் நிலுவைகளை ரசீதுகளைக் கணக்கீடு செய்து மீதமுள்ள நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட மாவட்ட ஆட்சியா் மற்றும் சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஆகியோா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.